ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!

Updated: Thu, Oct 06 2022 22:10 IST
Rohit Sharma visited the Siddhivinayak temple with family before flying to Australia! (Image Source: Google)

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். 

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். டி 20 உலக கோப்பையில் பங்கேற்கச் செல்லும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு பெர்த் மைதானத்தில் 13ஆம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது

அதில்வரும் 10ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி அதே அணியுடன் 2வது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. இதனைத் தொட்ர்ந்து 17ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19ஆம் தேதி நியூசிலாந்துடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

பெர்த் மைதானத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்பதால், வீரர்கள் அதனை பழகி கொள்ள ஏதுவாக 2 வாரத்திற்கு முன்பே இந்திய அணி புறப்பட்டு சென்றது. மேலும் இந்திய அணியில் உள்ள 7 வீரர்கள் இதுவரை ஒரு முறை கூட ஆஸ்திரேலியாவில் விளையாடியது இல்லை. இந்த நிலையில், ரோஹித் சர்மா செய்துள்ள காரியம் , ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார். அப்போது உலககோப்பை வெல்வது குறித்து ரோஹித் சர்மா நேர்த்தி கடன் செய்ததாகவும் தெரிகிறது. இது போன்ற பெரிய தொடரில் பங்கேற்பது முன் வீரர்கள், இது போன்று கோயிலுக்கு சென்று வழிப்படுவது வழக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை