அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியுல் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது ராஸ் அதிரின் சதத்தின் மூலம், கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக சதமடித்து அசத்திய ராஸ் அதிர் 100 ரன்களையும், பால் ஸ்டிர்லிங் 52 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்றிக்ஸ், மேத்யூ பிரிட்ஸ்கீ ஆகியோர் தலா 51 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 36 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறியதால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அதிர் 4 விக்கெட்டுகளையும், கிரஹாம் ஹூம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் 1-1 என்ற கனக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியது. 

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி சரித்திர சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் இவ்விரு அணிகள் மோதிய முதல் 6 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றியைப் பதிவுசெய்தது. மேற்கொண்டு இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ராஸ் அதிர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ராஸ் அதிர் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் ஓ பிரையன் மற்றும் அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News