செயின்ட் லூசியா கிங்ஸ் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபில் லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் ஜான்சன் சார்லஸ்  25 ரன்களையும், அகீம் அகஸ்டே 35 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வைஸ் 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். 

Advertisement

ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் கேப்டன் கிறிஸ் கிரீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

Advertisement

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், அணியின் கேப்டன் கிறிஸ் கிரீன் பொறுப்புடன் விளையாடி 48 ரன்களையும், ஷமார் ஸ்பிரிங்கர் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. 

லூசியா கிங்ஸ் அணி தரப்பில் காரி பைரீ 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2  விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காரி ஃபைரீ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் லூசியா கிங்ஸ் வீரர் ரோஸ்டன் சேஸ் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை அல்ஸாரி ஜோசப் வீச, அந்த ஓவரின் முதல் பந்தை ஃபேபியன் ஆலன் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். ஆனால் பந்த அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்த காரணத்தால், அது பேட்டில் பட்டவும் தேர்ட்மேன் திசையை நோக்கி சென்றது. 

Advertisement

அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து வாந்த ரோஸ்டன் சேஸ் பந்தை சரியாக கணித்ததுடன், அதனை கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதன் காரணமாக 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஃபேபியன் ஆலன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ரோஸ்டன் சேஸ் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News