ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Oct 02 2021 18:29 IST
Royal Challengers Bangalore vs Punjab Kings: 48th IPL Match Prediction, Fantasy XI Tips & Probable X (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

நடப்பு சீசனில் ஆர்சிபி அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ்
  • நேரம் - மாலை 3.30 மணி
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்

போட்டி முன்னோட்டம் 

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. 

அதிலும் கேப்டன் கோலி, மேக்ஸ்வெல், ஸ்ரீகர் பரத் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கையும், யுஸ்வேந்திர சஹால், ஹர்ஷல் படேல் ஆகியோர் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு வருவது அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலு, அடுத்தடுத்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளது.

ஆனாலும் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சரிவர பேட்டிங்கில் சோபிக்காதது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 27
  • ஆர்சிபி வெற்றி - 12
  • பஞ்சாப் கிங்ஸ் - 15

உத்தேச அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -
விராட் கோலி (கே), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

பஞ்சாப் கிங்ஸ் - கேஎல் ராகுல் (கே), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன்/ ஹென்றிக்ஸ், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ் - ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, ஐடன் மார்க்ராம், மயங்க் அகர்வால்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை