ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ஏனெனில் தற்போதுள்ள ஆர்சிபி அணி முற்றிலும் ஒரு புதிய அணியாக உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டனாக ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்  மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

இதனால் இந்த முறை, கடந்த சீசனில் கேகேஆர் அணியின் ஒரு பகுதியாக இருந்த இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பில் சால்ட் இம்முறை ஆர்சிபி அணியில் விராட் கோலியுடன் இணைந்து தொடக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் மூன்றாம் இடத்திலும், தேவ்தத் படிக்கல் நான்காம் இடத்திலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் மிடில் ஆர்டரைப் பற்றி பேசினால், 5ஆம் இடத்தில் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோனும், அணியின் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவும், 7ஆவது இடத்தில் ஃபினிஷராக டிம் டேவிட்டையும் களமிறக்க வாய்ப்புள்ளது. இவர்களுடன் அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா 8ஆம் இடத்தில் களமிறங்குவதுடன் அணியின்  பேட்டிங் ஆழத்தையும் அதிகரிப்பார். மேற்கொண்டு அவரால் பந்துவீச்சிலும் அணிக்கு பங்களிக்க முடியும்.

ஆர்சிபி அணியின் பந்துவீச்சு துறையை அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வழிநடத்தவுள்ளார். அவருக்கு துணையாக யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், நுவான் துஷாரா உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதில் ஜோஷ் ஹேசில்வுட் உடற்த்குதியுடன் இல்லை எனில் அவருக்கு பதில் நுவான் துஷாரா லெவனில் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி அணியின் கணிக்கப்பட்ட லெவன்: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேட்ச்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வி.கே.), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்/நுவான் துஷாரா.

Advertisement

இம்பேக்ட் வீரர்கள் - ரசிக் சலாம், சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News