Rajasthan Royals vs Punjab Kings Dream11 Prediction, IPL 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கேகேஆர் அணி மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில் மீதமுள்ள மூன்று இடங்களுக்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்துள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதன் காரணமாக அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

RR vs PBKS: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
  • நேரம் - இரவு 7.30 மணிகள்

RR vs PBKS: Pitch Report

Advertisement

பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மிகவும் தட்டையானது என்பதால் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இருக்காது. இதனால் இங்கு அதிக ஸ்கோரை பேட்டர்கள் குவிக்கலாம். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

RR vs PBKS: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 27
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 16
  • பஞ்சாப் கிங்ஸ் - 11

RR vs PBKS: Live Streaming Details

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Rajasthan Royals vs Punjab Kings Predicted Teams

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), டாம் கோஹ்லர்-காட்மோர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சுபம் துபே, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ் (வாரம்), பிரப்சிம்ரன் சிங், ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், சாம் கரன் (கே), அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வித்வத் கவேரப்பா

RR vs PBKS Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜானி பேர்ஸ்டோ, சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள்: ரவி அஸ்வின், சாம் கரண் (துணை கேப்டன்), ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள்: ஹர்ஷல் படேல், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்

RR vs PBKS Dream11 Prediction, Today Match Prediction, Today Match RR vs PBKS, RR vs PBKS Dream11 Team, RR vs PBKS Head-to-Head Record, Fantasy Cricket Tips, RR vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Rajasthan Royals vs Punjab Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News