இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தி வரும் இவர், இங்கிலாந்து அணிக்காக செய்த சாதனைகள் ஏறாளம்.

Advertisement

அதில் முக்கியமானவை 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது, மற்றும் கையிலிருந்து நழுவியது என நினைத்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்றது என பல த்ரில்லர் படங்களை ரசிகர்களுக்கு பரிசாக வழங்கியவர்.

Advertisement

தற்போது ஸ்டோக்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். 
 
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது இடது கையில் காயமடைந்தார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழும் பென் ஸ்டோக்ஸ் விலகியிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் விலகியுள்ள சூழலில், தற்போது ஸ்டொக்ஸும் விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News