ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னைச் சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
அதிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 70 ரன்களை விளாசி ருதுராஜ் அதில் 5 பவுண்டரி ஒரு சிக்சரையும் அடித்து ஆட்டமிழந்தார், அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்தினார்.
இந்த 70 ரன்களினால் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஐபில் தொடரில் 600 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக ஒரே சீசனில் 600 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் எனும் சதனையையும் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக 2013 ஐபிஎல் தொடரில் மைக் ஹஸ்ஸி 733 ரன்களை எடுத்தார், 2018 சீசனில் அம்பதி ராயுடு 602 ரன்கள் விளாசினார்.
மேலும் நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல். ராகுலுக்கு அடுத்த படியாக ருதுராஜ் 600 ரன்கள் மைல்கல்லை 2021 ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளார். கே.எல்.ராகுல் இப்போது 626 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார், இவரை நிச்சயம் ருதுராஜ் இதை உடைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.