இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரினை கைப்பற்றிய வேளையில் கடைசி போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் இந்திய அணியின் வீரர்கள் களமிறங்க காத்திருக்கின்றனர்.

Advertisement

ஏற்கனவே இந்த தொடரினை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் இன்றைய கடைசி போட்டியில் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதனால் அணியில் சில மாற்றங்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்றைய போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான என்பதனால் இன்றைய போட்டியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக தொடக்க வீரராக களமிறங்க இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய கடைசி போட்டியில் அவர் 19 ரன்களை அடித்தால் விராட் கோலி அந்த சாதனையை உடைத்து புதிய சாதனையை பதிவு செய்வார்.

அந்த வகையில் ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் விராட் கோலி 231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து கேஎல் ராகுல் 224 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் 213 ரன்கள் அடித்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவர் மேலும் 19 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 232 ரன்கள் அடித்து கோலியை மிஞ்சி ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக தனது பெயரை பதிவு செய்வார். அதோடு இந்த போட்டியில் ஒருவேளை 87 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு சர்வதேச டி20 தொடரில் 300 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News