இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான 2ஆவது சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சர்வீசஸ் அணியில் சூரஜ் வஷிஸ்ட் - ரவி சௌகான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவி சௌகான் 8 ரன்னிலும், சூரஜ் வஷிஸ்ட் 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மோஹித் அவஸ்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெஹித் அவஸ்தி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பலிவால் 22 ரன்னிலும், வினீத் தாங்கர் 14 ரன்னிலும், விகாஸ் ஹத்வாலா 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அர்ஜுன் ஷர்மா 24 ரன்களையும், பூனிய 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சர்விசஸ் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. மஹாராஷ்டிரா அணி தரப்பில் பிரதீப் தாதே, சத்யஜீத் பச்சாவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணி அதிரடியான தொடக்கத்தைப் பெற்றனர். 

அதிலும் அந்த அணியின் தொடக்க விரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரரான ஓம் போஷல் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சித்தேஷ் வீரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் தனது அதிரடியை கைவிடாத ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர் மழை பொழிந்ததுடன் நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

அத்துடன் நிற்காக ருதுராஜ் கெய்காவட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் என 148 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய சிதேஷ் வீர் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனார். இதன்மூலம் மஹாராஷ்டிரா அணி 20.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்து அசத்திய மஹாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News