தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தற்போது 33 வய்தை மட்டுமே எட்டிவுள்ள கிளாசென் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,  “சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு ஒரு சோகமான நாளாகும். எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் அதே நேரத்தில் நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்

Advertisement

முதல் நாளிலிருந்தே, என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனது சிறுவயது முதல் கனவு கண்ட அனைத்தும் அதுதான். என் மார்பில் புரோட்டியாஸ் பேட்ஜுடன் விளையாடியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக இருந்தது, எப்போதும் இருக்கும். இந்த முடிவு எனக்கு வாய்ப்பளிப்பதால், எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் சிறந்த நண்பர்களையும் உறவுகளையும் நான் பெற்றுள்ளேன். தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவது என் வாழ்க்கையை மாற்றிய சிறந்த மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதும் தென் ஆப்பிரிக்க அணியின் பெரிய ஆதரவாளராக இருப்பேன். மேலும் என்னையும் எனது அணியினரையும் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறிவுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

தற்போது 33 வயதாகும் ஹென்ரிச் கிளாசென் தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமானர். இதில் அவர் தனது அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ரன்களையும், 60 ஒருநாள் போட்டிகளில் 2141 ரன்களையும், 58 டி20 போட்டிகளில் 1000 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் தற்போதைய தென்னாப்பிரிக்க அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிவுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News