தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கல் நிறைந்திருப்பதால் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - நியூ வாண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம் - இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

இப்போட்டியை தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி,  ஆங்கிலம் போன்ற  மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் கிரிக்கெட் பிரியர்கள் மொபைல் போன்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பைப் பார்க்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 91
  • இந்தியா - 38
  • தென் ஆப்பிரிக்கா - 50
  • முடிவில்லை - 03
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ஜோஹ்ன்னஸ்பர்க் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இமாலய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.

உத்தேச லெவன்

Advertisement

இந்தியா: ரஜத் படிதார், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கே), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஹென்ரிச் கிளாசன், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ரிங்கு சிங்
  • ஆல்-ரவுண்டர்கள்: அக்சர் படேல், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள்: கேசவ் மகராஜ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்
Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News