பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!

Updated: Tue, Dec 26 2023 16:12 IST
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவும், தென் ஆப்பிரிக்க அணியில் நந்த்ரே பர்கர், டேவிட் பெடிங்ஹாம் ஆகியோரும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தோடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், ஷுப்மன் கில் 2 ரன்களிலும் என அறிமுக வீரர் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்கோ ஜான்சென் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தவறவிட தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் வாய்ப்பும் கைநழுவியது. 

இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழப்பிற்கு 91 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 33 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை