SA vs IND, 2nd Test: விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்தியா; ராகுல் கேப்டன்!

Updated: Mon, Jan 03 2022 13:08 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோஹனன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி போட்டியிலிருந்து விலகியுள்ளார். அதன்காரணமாக கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 

இதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. மேலும் விராட் கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்தியா - கேஎல் ராகுல்(கே), மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), ஐடன் மக்ரம், கீகன் பீட்டர்சன், ராஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, டுவான் ஒலிவர் லுங்கி இங்கிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை