South Africa vs India 2nd T20I Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளதால், இப்போட்டியில் தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் விளையாடும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SA vs IND 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானம், க்கெபெர்ஹா
  • நேரம் - நவம்பர் 10, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs IND 2nd T20I Pitch Report

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 9 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 5 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 136 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 180 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SA vs IND 2nd T20I: Where to Watch?

Advertisement

தென் ஆப்பிரிக்கா - இந்தியா டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

SA vs IND T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 28
  • தென் ஆப்பிரிக்கா - 11
  • இந்தியா - 16
  • முடிவில்லை - 01

South Africa vs India 2nd T20I Probable Playing XI

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ஒட்னீல் பார்ட்மேன், பேட்ரிக் க்ரூகர்.

இந்தியா உத்தேச லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

SA vs IND 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர் - அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன் (துணைக்கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், ஜெரால்ட் கோட்ஸி.
Advertisement

SA vs IND 2nd T20I Dream11 Prediction, SA vs IND Dream11 Prediction, Today Match SA vs IND, SA vs IND T20I Series, SA vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs India

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News