SA vs IND, 2nd Test: பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!

Updated: Sat, Jan 01 2022 21:23 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஜஹனன்ஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே தொடரின் முதல் போட்டியில் வென்றுள்ள இந்திய அணி அடுத்தப்போட்டியிலும் வெற்றிபெற முயற்சிக்கும். 

 

மேலும் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை