South Africa vs New Zealand Dream11 Prediction, ICC Champions Trophy 2025: பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

Advertisement

இதில் நாளை நடைபெரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

SA vs NZ ICC Champion Trophy 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து
  • இடம் -  கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - மார்ச் 05, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs NZ Match Pitch Report

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 77 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 38 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 36 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 253 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்கள் உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SA vs NZ: Where to Watch?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SA vs NZ ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 73
  • தென் ஆப்பிரிக்கா - 42
  • நியூசிலாந்து - 26
  • முடிவில்லை - 05

SA vs NZ Dream11 Team, ICC Champions Trophy 2025

  • விக்கெட் கீப்பர்கள் - டாம் லாதம், ஹென்ரிச் கிளாசென், ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன் (துணை கேப்டன்), டெம்பா பவுமா(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் சான்ட்னர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன்
  • பந்து வீச்சாளர் - மேட் ஹென்றி, காகிசோ ரபாடா

South Africa vs New Zealand Probable Playing XI

South Africa Probable Playing XI: ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி. 

New Zealand Probable Playing XI: வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.

SA vs NZ ODI Dream11 Prediction, SA vs NZ Dream11 Prediction, Today Match SA vs NZ, ICC Champion Trophy 2025, SA vs NZ Dream11 Team, SA vs NZ Pitch Report, Today Match Prediction, Fantasy Cricket Tips, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs New Zealand 

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News