தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 25 ரன்கள் எடுத்த கையோடு சையும் அயூப்பும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். பின் இப்போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வானும் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையடுத்து இணைந்த சல்மான் அலி அகா மற்றும் காம்ரன் குலாம் இணையும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் சல்மான் அகா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் காம்ரன் குலாம் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் இர்ஃபான் கான் 15, ஷாஹீன் அஃப்ரிடி 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களை எடுத்திருந்த நிலையில் காம்ரன் குலாமும் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அறிமுக வீரர் குவேனா மபாகா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெம்பா பவுமா 12 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸியும் 34 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வென்டர் டுசென் 23 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 21 ரன்களுடனும் என விக்கெட்டுகளை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 113 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடிய  ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் 29 ரன்கள் எடுத்திருந்த் நிலையில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்கோ ஜான்சன் 3 ரன்களுக்கும், ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஒரு ரன்னிலும், ஃபோர்டுயின் 9 ரன்களுக்கும், குவெனா மபாகா ஒரு ரன்னிலும் என வரிசையாக அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை போராடிய ஹென்ரிச் கிளாசென் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 97 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News