South Africa Women vs New Zealand Women Final ICC Women's T20 World Cup 2024: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.

Advertisement

இத்தொடரின் முதல் அரையிறுதிப்போட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் இதுநாள் வரை உலகக்கோப்பை தொடரை வென்றதில்லை என்பதால், நாளைய போட்டியில் எந்த அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

SA-W vs NZ-W Final: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்க மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - துபாய் சர்வாதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.20 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

SA-W vs NZ-W Final: Pitch Report

தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 108 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 49 முறையும், சேஸிங் செய்த அணி 58 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SA-W vs NZ-W Final: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 16
  • நியூசிலாந்து மகளிர் அணி - 11
  • தென் ஆபிரிக்க மகளிர் அணி - 04
  • முடிவில்லை - 01
Advertisement

SA-W vs NZ-W Final: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

South Africa Women vs New Zealand Women Possible XIs 

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: தஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் (கே), மரிஸான் கேப், அன்னேக் போஷ், சோலே ட்ரையோன், சுனே லூஸ், நதின் டி கிளார்க், சினாலோ ஜாஃப்டா, அன்னேரி டெர்க்சன், நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காக்கா

நியூசிலாந்து மகளிர் அணி: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), புரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்

Advertisement

WI-W vs NZ-W 2nd Semifinal Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஷெமைன் காம்பெல்
  • பேட்டர்ஸ்: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், லாரா வோல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், அமெலியா கெர், மரிஸான் கேப்,  சோலே ட்ரையோன்
  • பந்துவீச்சாளர்கள்: லியா தஹுஹு, ரோஸ்மேரி மெய்ர், நோன்குலுலேகோ மலாபா

SA-W vs NZ-W Final Dream11 Prediction, Today Match SA-W vs NZ-W, SA-W vs NZ-W Dream11 Team, South Africa Women vs New Zealand Women, Fantasy Cricket Tips, SA-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News