மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Oct 03 2024 21:30 IST
Image Source: Cricketnmore

South Africa Women vs West Indies Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிவுள்ளது.

அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

SA W vs WI W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா மகளிர் vs  வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.04 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

SA W vs WI W T20I Pitch Report

தென் ஆப்பிரிக்கா மகளிர் vs  வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 97 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 45 முறையும், சேஸிங் செய்த அணி 51 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SA W vs WI W T20I: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 22
  • தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி - 7
  • வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி - 14
  • முடிவில்லை - 01

SA W vs WI W T20I: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

South Africa Women vs West Indies Women Possible XIs

தென் ஆப்பிரிக்கா மகாளிர்: லாரா வோல்வார்ட் (கே), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், மரிஸான் கேப், சுனே லூஸ், க்ளோ ட்ரையோன், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, அயபங்கா காக்கா, நதின் டி கிளர்க், துமி செகுகுனே.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர்: ஹீலி மேத்யூஸ் (கே), ஸ்டேஃபானி டெய்லர், ஷெமைன் காம்பெல், செடியன் நேஷன், ஆலியா அலீன், டியாண்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, அஃபி ஃபிளெட்சர், கியானா ஜோசப், செர்ரி ஆன் ஃப்ரேசர், கரிஷ்மா ராம்ஹராக்.

SA W vs WI W T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - ஷமைன் கேம்ப்பெல்
பேட்ஸ்மேன்கள் - ஸ்டாஃபானி டெய்லர், லாரா வோல்வார்ட், செடிடன் நேஷன், டாஸ்மின் பிரிட்ஸ்
ஆல்-ரவுண்டர்கள் - ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), சோலி ட்ரையோன், மரிஸான் கேப் (துணை கேப்டன்), சினெல்லே ஹென்றி
பந்துவீச்சாளர்கள் - அஃபி பிளெட்சர், அயபங்கா காக்கா

SA W vs WI W T20I Dream11 Prediction, SA W vs WI W Dream11 Team, Fantasy  Cricket Tips, SA W vs WI W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa Women vs West Indies Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை