எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!

Updated: Thu, Jan 25 2024 22:40 IST
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்! (Image Source: Google)

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தியது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால் 20 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 13 ரன்களுக்கும், காலின் இங்ராம் 4 ரன்களுக்கும என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் இணைந்த ஷேன் டேட்ஸ்வெல் - ஜேம்ஸ் நீஷம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை சிறுதுநேரம் தாக்குப்பிடித்தனர். அதன்பின் ஷேன் டேட்ஸ்வெல் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீஷம் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.  அதன்பின் களமிறங்கிய வெய்ன் பார்னெல் 13, ஈதன் போஷ் 4 ரன்கலில் என ஆட்டமிழந்தனர்.

இதனால் 18.3 ஓவர்களில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், டேனியல் வோரால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை