ENG vs IND, 2nd Test: சாய் சுதர்ஷனுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு - தகவல்
ENG vs IND, 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றி பெற்று காம்பேக் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதையடுத்து இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி வருவதன் காரணமாக அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மூலம் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான சாய் சுதர்ஷன் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அவரது இடத்தை நிரப்பும் வகையில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கொண்டு வாஷிங்டன் சுந்தரால் பந்துவீச்சிலும் அணிக்கு கைகொடுக்கும் முடியும் என்பதால் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சாய் சுதர்ஷன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், மூன்றாம் வரிசையில் கருண் நாயருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.