டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்; கோலி, தூபேவுக்கு இடமில்லை!

Updated: Fri, Apr 26 2024 14:05 IST
டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்; கோலி, தூபேவுக்கு இடமில்லை! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் நடப்பு  டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இத்தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற தங்களது கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தான் தேர்வுசெய்துள்ள அணியை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷிவம் தூபேவுக்கு இடம் அளிக்கவில்லை. அவர் தேர்வுசெய்துள்ள அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடக்க வீரர் இடங்களை கொடுத்துள்ளார். 

அதேசமயம் மூன்றாம் இடத்தில் விக்கெட் கீப்பர் பெட்டரான சஞ்சு சாம்சனை தெர்வுசெய்தாலும், அவரை ஒரு பேட்டராக மட்டுமே அணியில் எடுத்துள்ளார். அதுதவிர்த்து சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், குர்னால் பாண்டியா ஆகியோருக்கும் அவரது அணியில் இடம் கிடைத்துள்ளது. இதில் ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுலை அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். 

மேலும் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான், மயங்க் யாதவ், ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இருப்பினும் இவர் தேர்வு செய்துள்ள அணியால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக விராட் கோலி, ஷிவம் தூபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காதது பெரும் விவாதமாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அவேஷ் கான், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், குர்ணால் பாண்டியா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை