ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையி, அடுதடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் புதிய மைல்கல் ஒன்றை எட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதன்படி இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை அடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி-20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் சஞ்சு சாம்சன் பெறுவார். இதுவரை, டி20 கிரிக்கெட்டில் 274 போட்டிகளில் 262 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 298 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்தியாவைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ளனர். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சாம்சன் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 2 பவுண்டரிகளை அடித்து 12 ரன்களைச் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.