இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணியானது மூன்று போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும் பதிவுசெய்தது. இதன்மூலம் இந்திய அணி இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 2 சதங்களையும், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. 

Advertisement

இருப்பினும் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தொடரின் கடைசி போட்டியிலும் சதமடித்து அசத்தியதுடன், ஒரே ஆண்டில் மூன்று சர்வதேச டி20 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தினார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகை ஒவரின் முகத்தை தாக்கியது. மேலும் அக்காணொளியும் இணையத்தில் வைரலானது. 

அதன்படி அப்போட்டியின் 10ஆவது ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸர் அடித்த நிலையில், அது மைதானத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகையில் முகத்தில் பலமாக தாக்கியது. இந்த சம்பவத்தின் போது, ​​ஒருபுறம் பந்து மிக வேகமாக இருந்தாலும், மறுபுறம் அந்த ரசிகை பந்தை கவணிக்காததே இந்த விபத்திற்கு காரணம். மேலும் பந்து தாக்கியதன் காரணமாக அந்த ரசிகை வலியால் கதறி அழுத கணொளியும் வைரலானது. 

இதனைக்கண்ட சஞ்சு சாம்சன் களத்தில் இருக்கும் போதே அதற்கான மன்னிப்பையும் கேட்டிருந்தார். இந்நிலையில், அப்போட்டி முடிந்த பிறகு பந்து தாக்கிய ரசிகையை நேரில் சந்தித்த சஞ்சு சாம்சன் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகையை சஞ்சு சாம்சன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளியானது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News