கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற முடிந்து டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு ரெகுலராக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், 2024ஆம் ஆண்டி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்சன் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கருதப்படுகிறது. இதற்கேற்றாற்போல், சாம்சனும் சிறப்பாக செயல்பட்டால்தான், இடத்தை உறுதிசெய்ய முடியும். 

Advertisement

இந்நிலையில், நேற்று நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சாம்சன் அபாரமாக விளையாடாமல் சொதப்பினார். அதிலும் நேற்று  ஒருமுறை கேட்ச் வாய்ப்பை அவர் கொடுத்த நிலையில், அசலங்கா அதனை பிடிக்க தவறினார். இதனால், மறுவாய்ப்பு கிடைத்தும் அடுத்த இரண்டாவது பந்திலேயே சாம்சன் ஆட்டமிழந்ததுதான், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இப்போதுமட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக திடுமாறி வருகிறார்.

Advertisement

இந்நிலையில், சாம்சன் இதனை செய்தால், அவரால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியும் என சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்சன் மிகச்சிறந்த வீரர். இருப்பினும், அவரது ஷாட் செலக்ஷன்தான் சிலமுறை தவறாக இருக்கிறது. தற்போதும் கூட, தவறான ஷாட்டை ஆடித்தான் ஆட்டமிழந்திருக்கிறார். ஆகையால், சாம்சன் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இதனை அவரால் சுலபமாக செய்ய முடியும். 

இந்த தவறை அவர் விரைவில் திருத்திக் கொண்டால், நிச்சயம் தொடர்ந்து ரன்களை குவிக்க முடியும். சாம்சன் திறமையானவர்தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதேவேளையில், கிடைக்கும் வாய்ப்பினை அவர் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இடம் பறிபோக கூட வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News