வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

Advertisement

இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் சதங்களை அடித்து மிரட்ட, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 572 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 177 ரன்களையும், வியான் முல்டர் 105 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களிஅயும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமாளித்தனர். இருப்பினும் மொமினுல் ஹக் மட்டுமே ஓரளவு தாக்குபிடிதத்துடன் அரைசதம் கடந்து 82 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானதுடன், முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆனும் ஆனது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்த முறை தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பெவிலியன் திரும்பினர். 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹசன் மஹ்மூத் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததால், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேஷவ் மஹாரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News