இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கி இலங்கை மகளிர் அணியில் விஷ்மி குனரத்னே 7 ரன்களுக்கும், ஹசினி பெரேரா 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹன்சிமா கருணரத்னே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஹன்சிமா 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 42 ரன்களையும், நிலக்‌ஷி டி சில்வா 36 ரன்களயும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க, இலங்கை மகளிர் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் அயபொங்கா காகா, நதின் டி கிளார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் லாரா குட்டால் 7 ரன்களுக்கும், டெல்மி டக்கர் 2 ரன்களுக்கும், சுனே லூஸ் 21 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். 

பின்னர் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - மரிஸான் கேப் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் சிறப்பாக விளையாடிய லாரா வோல்வார்ட் சதமடித்து அசத்த, மரிஸான் கேப்பும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லாரா வோல்வார்ட் 110 ரன்களையும், மரிஸான் கேப் 80 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 47.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News