மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: கேத்ரின் பிரைஸ் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

Updated: Mon, Sep 02 2024 13:50 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

தற்சமயம் அந்த வகையில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியமும் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தங்கள் அணியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி நட்சத்திர ஆல் ரவுண்டர் கேத்ரின் பிரைஸ் தலைமையிலான இந்த அணியில் அவரது தங்கை சாரா பிரைஸ் அணியின் துணைக்கேப்டானக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அப்தஹா மக்சூத், மேகன் மெக்கல், கேத்ரின் ஃபிரேசர் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்காட்லாந்து அணியானது, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணியானது விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஸ்காட்லாந்து மகளிர் அணி: கேத்ரின் பிரைஸ் (கே), சாரா பிரைஸ், லோர்னா ஜாக்-பிரவுன், அப்பி ஐட்கன்-ட்ரம்மண்ட், அப்தாஹா மக்சூத், சாஸ்கியா ஹார்லி, சோலி ஏபெல், பிரியனாஸ் சாட்டர்ஜி, மேகன் மெக்கால், டார்சி கார்ட்டர், அலிசா லிஸ்டர், ஹன்னா ரெய்னி, ரேச்சல் ஸ்லேட்டர், கேத்ரின் ஃபிரேசர், ஒலிவியா பெல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை