ஸ்ரேயஸ் ஐயருக்கு கூடுதல் வாய்ப்புகள் தரவேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!

Updated: Thu, Jul 21 2022 22:41 IST
Image Source: Google

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் தலா ஓர் ஆட்டத்தில் விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் மொத்தமாக மூன்று இன்னிங்ஸிலும் 62 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 5 ஆட்டங்களில் 94 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்திய ஒருநாள், டி20 அணிகளில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஸ்ரேயஸ் ஐயரிடம் உள்ள தலைமைப்பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வருங்காலத்தில் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் வாய்ப்புள்ளது. இந்தக் காரணத்துக்காக இந்திய அணியில் அவருக்குக் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவரிடம் உள்ள எல்லாக் குணங்களும் எனக்குப் பிடிக்கும். அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து ரன்கள் எடுக்கவில்லையென்றால் இன்னொரு வீரரைத் தேர்வு செய்யலாம். 

ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் திறமையானவர். ஷார்ட் பந்துகளில் ரன்கள் எடுப்பதில் அவருக்குச் சிரமம் உள்ளது. இதனால் அவர் விளையாடும்போது பவுன்சர் பந்துகளை வீசுகிறார்கள். இதைச் சரிசெய்வதற்கான வழியை அவர் கண்டுபிடித்தாரா எனத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் சுரேஷ் ரெய்னா போல உள்ளார். இந்தச் சிக்கலைச் சரிசெய்துவிட்டால் இந்திய அணியின் பட்டியலில் அவர் நிச்சயம் இடம்பிடிப்பார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை