வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் வங்கதேச அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வ்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Advertisement

அதன்படி நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடிய வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்து விளையாடியதால் 10 புள்ளிகள் குறைந்துள்ளார். இதன்மூலம் ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியளில் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

Advertisement

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 3ஆம் இடத்தில் நீடிக்கும் நிலையில், வங்கதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு இடம் பின் தங்கி ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இங்கிலாந்தின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் மூன்று மற்றும் நான்காம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஐந்தாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். 

அதேசமயம் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பெரிதளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை. இங்கிலாந்தின் ஆதில் ரஷித் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் வநிந்து ஹசரங்காவும், மூன்றாம் இடத்தில் அகீல் ஹோசைனும் நீடிக்கின்றனர். நான்காம் இடத்தில் இந்திய வீரர் அக்ஸர் படேல் தொடர்கிறார். ஐந்தாம் இடத்தில் மஹீஷ் தீக்‌ஷனாவும் உள்ளனர். இப்பட்டியலின் முதல் 5 இடங்களில் எந்த வேகப்பந்து வீச்சாளரும் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News