வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 15) கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Advertisement

இப்போட்டிகான தென் ஆப்பிரிக்க அணியின் நந்த்ரே பர்கர், டேன் பீட் ஆகியோரும், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசபும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐடன் மார்க்ரம் 14 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹம் 28 ரன்களிலும், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 88 ரன்களுக்குள்ளேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக விளையாடும் ஷமார் ஜோசப் தனது முதல் போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதிலும் குறிப்பாக ஐடன் மார்க்ரமை தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் ஷமார் ஜோசப் விக்கெட்டை வீழ்த்திய காணொளி தற்சமயம் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News