இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Advertisement

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ் இண்டீஸ் அணியானது கேப்டன் ஷாய் ஹோப்பின் சதத்தின் மூலமும், கேசி கார்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக் கேப்டன் ஷாய் ஹோப் 117 ரன்களையும், கேசி கார்டி 71 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜான் டர்னர், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணியானது லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியான சதத்தின் மூலம்  47.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 329 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக விளையாடிய கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் சதம் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 124 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய பில் சால்ட் 59 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்களையும், சாம் கரன் 52 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாளை தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.’

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். இப்போட்டியில் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஹெட்மையர் அதில் மூன்று சிக்ஸர்களை விளாசி 24 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஷிம்ரான் ஹெட்மையர் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News