பிசிசிஐ-க்கு சரியான பதிலடியாக இது அமையும் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sat, Jun 08 2024 09:09 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், மூன்றாவது முறையாக் ஐபிஎல் தொடரில் பட்டம் வென்று அசத்தியது. 

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் தனக்கு காயம் இருப்பதாகும், அதனால் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறியதுடன், ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்த பட்டியளில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். 

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இடம்பெறாத நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இடம்பெறவில்லை. மாறாக ரஞ்சிக்கோப்பையில் விளையாடமல் போனதால் தான் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ நடவடிக்கைக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்று விளையாடினார். ஆனாலும் அவரது ஒப்பந்தத்தை பிசிசிஐ புதுபிக்கவில்லை. 

அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். இதில் மும்பை அணியானது சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. அதன்பின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்சியின் மூலம் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இந்நிலையில் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளில் இருந்த நீக்கப்பட்டது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டிருந்தேன். அத்தொடருக்கு பிறகு நான் ஓய்வு எடுக்க விரும்பியதுடன், எனது உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் வேலை செய்து மீட்டெடுக்க விரும்பினேன். ஆனால் அந்த இடைவெளியில் எனக்கும் பிசிசிஐ-க்கும் இருந்த தகவல் தொடர்பு சரியாக இல்லாததால், சில முடிவுகள் எனக்கு சாதகமாக செல்லாமல் போய்விட்டது. 

எனவே நான் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட முடிவுசெய்தேன். நான் ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்றால் அது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்று முடிவுசெய்தேன். அதிர்ஷ்டவசமாக நான் நினைத்தது போலவே அனைத்தும் சரியாக நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரின் இக்கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை