ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிவித்த ரோஹித் சர்மா!

Updated: Tue, Mar 14 2023 09:47 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயர் களத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு பதில் கே எஸ் பரத் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வராததால் விராட் கோலி எதிர்முனையில் பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு இரட்டை சதம் அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் குறித்து ரோஹித் சர்மா அப்டேட் கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “மிகவும் துரதிஷ்டவசமான விஷயம். அது தன்னுடைய பேட்டிங் வாய்ப்புக்காக அந்தப் பாவமான ஜீவன் ஒரு நாள் முழுவதும் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்தது. அடுத்த நாள் மைதானத்திற்கு வரும் முன்பே ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றார்.

தற்போது வரை ஸ்ரேயாஸ் ஐயர் மெடிக்கல் ரிப்போர்ட் எனக்கு வரவில்லை. மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரிந்த பின்பு தான் அவர் குறித்து எதுவும் சொல்ல முடியும்.  வழி அதிகமாக இருந்ததால்தான் அவர் மைதானத்திற்கு நேற்றும், இன்றும் வரவில்லை. இதனால் அவர் உடனடியாக களத்திற்கு திரும்புவார் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர் விரைவில் குணமடைந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் 17ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் இன்று மும்பை செல்கின்றனர். ஸ்ரேயாஸ் ஐயரும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்தத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஸ்ரேயாஸ்  ஐயருக்கு பதில் இன்னும் மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதனால் பிளேயிங் லெவனில் நடு வரிசையில் சூரிய குமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஜடேஜா ஆகியோர் தங்களது இடத்தை நிரப்பி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை