விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகள் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஷுப்மன் கில் இப்போட்டியில் 93 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படாஇத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் தனது 5000 ரன்களை பூர்த்தி செய்து அசத்தியதுடன், அதிவேகமாக இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரார் விராட் கோலி 154 இனிங்ஸ்களில் 5ஆயிரம் டி20 ரன்களைக் கடந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஷுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். அதேசமயம் இந்திய வீரர் கேஎல் ராகுல் 143 இன்னிங்ஸ்களில் 5ஆயிரம் ரன்களைக் கடந்து அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதி வேகமாக 5,000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
- 143 இன்னிங்ஸ் - கே.எல். ராகுல்
- 154 இன்னிங்ஸ் – ஷுப்மான் கில்*
- 167 இன்னிங்ஸ் - விராட் கோலி
- 173 இன்னிங்ஸ் - சுரேஷ் ரெய்னா
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 93 ரன்களையும் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.