ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஷுப்மன் கில் அவர் அரைசதம் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். தற்போது மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளில் 23 இன்னிங்ஸ்களில் விளையாடி அதில் 523 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதேசமயம் ஷுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவர் 10 இன்னிங்ஸ்களில் 474 ரன்களைக் குவித்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரராக சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாஅ உள்ளார். அவர் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகளில் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 714 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

ஐபிஎல் பிளேஆஃப்களில் அதிக ரன்கள்:

  • 714 – சுரேஷ் ரெய்னா (24 இன்னிங்ஸ்)
  • 523 – எம்எஸ் தோனி (23 இன்னிங்ஸ்)
  • 474 – ஷுப்மான் கில் (10 இன்னிங்ஸ்)
  • 390 – ஃபாஃப் டு பிளெசிஸ் (15 இன்னிங்ஸ்)
  • 389 – ஷேன் வாட்சன் (12 இன்னிங்ஸ்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News