விராட் கோலியி உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த ஷுப்மன் கில்!

Updated: Fri, Feb 07 2025 12:20 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து காயம் காரணமாக நட்சத்திர விராட் கோலி விலகினர். அதன்படி அவரது முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இப்போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்கியதுடன், அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் மூன்றாம் இடத்தில் களமிறங்கினார். 

இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் உடற்தகுதி குறித்து ஷுப்மன் கில் அப்டேட் வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'விராட் கோலி காலையில் எழுந்தபோது, ​​அவரது முழங்காலில் சிறிது வீக்கம் இருந்தது. நேற்றைய பயிற்சி அமர்வு வரை அவர் நன்றாக இருந்தார். கவலைப்பட ஒன்றுமில்லை. அடுத்த ஆட்டத்திற்கு அவர் நிச்சயமாகத் தகுதி பெறுவார்' என்று கூறியுள்ளார்.

விராட் கோலியின் 17 வருட ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில், காயம் காரணமாக அவர் விளையாடும் லெவனில் இடம்பெற முடியாமல் போனது இது இரண்டாவது முறையாகும். சமீபத்தில் விராட் தனது கழுத்து பகுதியில் ஏற்பற்ற வலி கரணமாக சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியிலும் அவரால் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணிக்காக இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் 283 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 58.18 சராசரியாக 13,906 ரன்களை எடுத்துள்ளது.  இதில் 50 சதங்களும், 72 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவரது அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ரானா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை