India Probable Playing XI For Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனில், தொடக்க வீரராக சுப்மன் கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இதன் காரணமாக இந்த சிறப்பு கட்டுரையின் மூலம் இந்த போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சுப்மன் கில் துணைக்கேப்டனாக இருப்பதால் அவரை லெவனில் இருந்து நீக்குவது கடினமாகும். 

இதன் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர் இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இல்லை என்பதால், அவருக்கு லெவனில் இடம் கிடைப்பதும் சந்தேகமாகியுள்ளது. இதனால் அணியின் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 

இதுதவிர அணியின் ஃபினிஷர் ரோலில் சிவம் தூபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோரிடையே கடும் போட்டி உள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் ஒரு ஆல்ரவுண்டரை விரும்பினால், சிவம் துபேக்கு வாய்ப்பு கிடைக்கும், அதே நேரத்தில் ரிங்கு சிங் கூடுதல் பேட்ஸ்மேனுக்கு தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம். பந்துவீச்சை பொறுத்த வரையில் வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் அணியை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்: (அணி 1): சுப்மான் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே/ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement

இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன் (அணி 2): சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே/ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

Also Read: LIVE Cricket Score

2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News