12ஆவது சீசன் சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள புரோவிடன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியனது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமறியது. அந்த அணியில் டேவிட் மில்லர் மற்றும் அலிக் அதானாஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 36 ரன்களையும், அலிக் அதானாஸ் 26 ரன்களைச் சேர்த்தனர். கயானா அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் மொயீன் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். 

பின்னர் 40 ரன்களில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரட்யாக விளையாடி தனது அரைசதத்தை கடந்த கையோடு 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியது

இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியடன், இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இருதுறையிலும் அசத்திய மொயீன் அலி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் கயானா வீரர் கெவின் சிங்க்ளேர் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Advertisement

அதன்படி, கயானா வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ராயல்ஸ் வீரர் டேவிட் மில்லர் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். அப்போது பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கென்வின் சின்க்ளர் அபாரமாக தாவியதுடன், சிக்ஸருக்கு சென்ற பந்தை தடுத்து மீண்டும் பவுண்டரி லைனுக்குள் வீசினார். 

இதனால் அந்த பந்தில் ராயல்ஸ் அணியால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் சிக்ஸருக்கு சென்ற பந்தை தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் தடுத்து நிறுத்திய கெவின் சின்க்ளர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News