St Kitts and Nevis Patriots vs Barbados Royals Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் பேட்ரியாட்ஸ் அணியானது இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது முதல் போட்டியில் வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

SKN vs BR : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
  • இடம் - வார்னர் பார்க் மைதான, செயின்ட் கிட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 07, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SKN vs BR : Pitch Report

செயின்ட் கிட்ஸில் உள்ள  வார்னர் பார்க் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

SKN vs BR : Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Advertisement

SKN vs BR : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 18
  • செயின்ட் கிட்ஸ் - 10
  • ராயல்ஸ் -  08
  • முடிவில்லை - 00

St Kitts and Nevis Patriots vs Barbados Royals Probable Playing XI

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: eவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), கைல் மேயர்ஸ், மைக்கேல் லூயிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஒடியன் ஸ்மித், ரியான் ஜான், ஆஷ்மீத் நெத், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

Advertisement

பார்படாஸ் ராயல்ஸ்: குயின்டன் டி காக், ரஹ்கீம் கார்ன்வால், ஷமர் ப்ரூக்ஸ், டேவிட் மில்லர், ரோவ்மேன் பாவெல், ஜேசன் ஹோல்டர், துனித் வெல்லாலகே, கேசவ் மகாராஜ், ஓபேட் மெக்காய், நவீன்-உல்-ஹக், நைம் யங்.

St Kitts and Nevis Patriots vs Barbados Royals Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப் (துணை கேப்டன்), குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள்- எவின் லூயிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், ஷமர் ப்ரூக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - கைல் மேயர்ஸ் (கேப்டன்),ரஹ்கீம் கார்ன்வால், ரோவ்மன் பாவெல்
  • பந்துவீச்சாளர்கள் - நவீன் உல் ஹக், ஆன்ரிச் நோர்ட்ஜே

SKN vs BR Dream11 Prediction, SKN vs BR Dream11 Team, CPL 2024, Fantasy  Cricket Tips, SKN vs BR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between St Kitts and Nevis Patriots vs Barbados Royals

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News