ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக அறியப்படுகிறது. இங்கு பந்துவீச்சாளர்கள் பிட்சியிலிருந்து திருப்பம் மற்றும் பிடியைப் பெற உதவுகிறது. இதனை பயன்படுத்தி பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டார் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறலாம். மேலும் இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 3 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 133 ரன்கள். இங்கு அதிகபட்ச ஸ்கோராக 141 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  •  மோதிய போட்டிகள் – 05
  • இலங்கை - 04
  • ஆஃப்கானிஸ்தான் - 01

நேரலை

Advertisement

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட் டென் 5 சேனலில் நேரலையில் காணலாம். அதேசமயம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

உத்தேச லெவன்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான்(கே), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், கைஸ் அகமது, நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபாரூக்கி, நவீன் உல் ஹக்.

Advertisement

இலங்கை: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க(கே), மஹீஷ் தீக்ஷனா, பினுர ஃபெர்னாண்டோ, மதீஷா பதிரனா

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ், ரஹ்மனுல்லா குர்பாஸ் (துணைக்கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் – சரித் அசலங்கா, இப்ராஹிம் சத்ரன்
  • ஆல்-ரவுண்டர் - ஏஞ்சலோ மேத்யூஸ், முகமது நபி, குல்பதின் நைப், வனிந்து ஹசரங்க (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர் – மதிஷா பதிரனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News