இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs Australia 2nd ODI Dream11 Prediction: ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக அதற்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், முதல் போட்டியை வென்றுள்ள இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs AUS 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- இலங்கை vs ஆஸ்திரேலியா
- இடம் - ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
- நேரம் - பிப்ரவரி 14, காலை 10 மணி (இந்திய நேரப்படி)
SL vs AUS 2nd ODI Pitch Report
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 168 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 91 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 65 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக 375 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இங்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
SL vs AUS ODI Head To Head Record
- மோதிய போட்டிகள் – 105
- ஆஸ்திரேலியா - 64
- இலங்கை - 37
- முடிவில்லை - 04
SL vs AUS 2nd ODI: Where to Watch?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் சோனி ஸ்போர்ட் நெட்வொர்க்கில் கண்டு மகிழ முடியும். இது தவிர, இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.
SL vs AUS 2nd ODI Dream11 Team
- விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ், அலெக்ஸ் கேரி
- பேட்டர்கள் - ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, பதும் நிஷங்கா
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, சரித் அசலங்கா (கேப்டன்)
- பந்து வீச்சாளர் - ஆடம் ஜாம்பா, மஹீஷ் தீக்ஷனா
Sri Lanka vs Australia 2nd ODI Probable Playing XI
Sri Lanka 2nd ODI Probable Playing XI: பதும் நிஷங்க, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே), ஜனித் லியானகே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஈஷான் மலிங்கா, அசிதா ஃபெர்னாண்டோ.
Australia 2nd ODI Probable Playing XI : டிராவிஸ் ஹெட்/மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்/அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன்.
SL vs AUS 2nd ODI Dream11 Prediction, SL vs AUS Dream11 Prediction, Today Match SL vs AUS, SL vs AUS ODI Series, SL vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs AUS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs Australia
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.