Sri Lanka vs Bangladesh 1st ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடரை வென்றுள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பிலும், மறுபக்கம் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்கதேசமும் விளையாடும் என்பதாலும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SL vs BAN 1st ODI Match Details

மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
இடம் - ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- ஜூன் 02, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

R.Premadasa Stadium, Colombo Pitch Report

இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இப்போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 176 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 96 முறையும், முதலில் பந்துவீசிய அணி 68 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 233 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

SL vs BAN ODI Head To Head Record

  • மொத்தம் - 57
  • இலங்கை - 43
  • வங்கதேசம் - 12
  • டிரா - 02

SL vs BAN 1st ODI Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - பர்வேஸ் ஹொசைன் எமன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), பதும் நிஷங்கா (துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ
  • ஆல்-ரவுண்டர்கள் - சரித் அசலங்கா, மெஹிதி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள் - வநிந்து ஹசரங்கா, தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான்

SL vs BAN Predicted Playing 11

Advertisement

Sri Lanka Probable XI : பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (கேப்டன்), துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, தில்ஷான் மதுஷங்க, அசித ஃபெர்னாண்டோ

Bangladesh Probable XI : நைம் ஷேக், பர்வேஸ் ஹொசைன் எமன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி, லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், நஹித் ராணா.

SL vs BAN 1st ODI Dream11 Prediction, SL vs BAN Dream11 Team, SL vs BAN ODI Series, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka vs Bangladesh

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News