SL vs BAN, 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் கேப்டன் லிட்டன் தாஸ் 76 ரன்களையும், ஷமிம் ஹொசைன் 48 ரன்களையும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்கம் வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் எமான் ரன்கள் ஏதுமின்றியும், தன்ஸித் ஹச்ன் தமிம் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் தாவ்ஹித் ஹிரிடோய் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸும் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் லிட்டன் தாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த ஷமிம் ஹொசைனும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் சேர்ந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

இறுதியில் அரைசதத்தை நெருங்கிய ஷமிம் ஹொசைனும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் பினுரா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News