Sri Lanka vs India 2nd ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Advertisement

SL vs IND 2nd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs இந்தியா 
  • இடம் - ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு
  • நேரம் - ஆகஸ்ட் 04, மதிய 2.30 மணி
Advertisement

SL vs IND 2nd ODI Pitch Report

கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் இதுவரை 165 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன, அதில் 88 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 65 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs IND ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 169
  • இந்தியா - 99
  • இலங்கை - 57
  • முடிவில்லை - 13

SL vs IND 2nd ODI: Where to Watch?

Advertisement

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்க முடியும். இந்த போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளமான சோனி லிவ் (SonyLIV) தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி ரசிகர்கள் நேலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka vs India 2nd ODI Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஷிவம் தூபே, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமர்விக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெலலாகே, வனிந்து ஹஷரங்கா, மகேஷ் தீக்சன, அசிதா ஃபெர்னாண்டோ, முகமது ஷிராஸ்.

Sri Lanka vs India 2nd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - கேஎல்ராகுல், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் – குல்தீப் யாதவ், முகமது ஷிராஸ்

SL vs IND 2nd ODI Dream11 Prediction, Today Match  SL vs IND, SL vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs India

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

SL vs IND 1st ODI Preview: Kohli, Rohit in focus as India aim for winning start

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News