Sri Lanka vs India 3rd T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

SL vs IND 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs இந்தியா
  • இடம் - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
  • நேரம் - ஜூலை 30, இரவு 7 மணி
Advertisement

SL vs IND 3rd T20I Pitch Report

இலங்கையில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 25 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 9 முறை இரண்டாவது பேட்டிங் செய்த கணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்ச சராசரியாக 168 ரன்கள் உள்ளது. மேற்கொண்டு மழை பெய்வதற்கான அபாயமும் உள்ளதால் அது பேட்டர்களுக்கு மேலும் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs IND T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 31
  • இந்தியா - 21
  • இலங்கை - 09
  • முடிவில்லை- 01

SL vs IND 3rd T20I: Where to Watch?

Advertisement

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்க முடியும். இந்த போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளமான சோனி லிவ் (SonyLIV) தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி ரசிகர்கள் நேலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka vs India 3rd T20I Probable Playing XI

இந்திய உத்தேச லெவன் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பந்த், ரியான் பராக், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா/ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/ வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்/ கலீல் அஹ்மத், முகமது சிராஜ்.

Advertisement

இலங்கை உத்தேச லெவன் : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசால் மெண்டிஸ்,சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷ பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ.

Sri Lanka vs India 3rd T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ், சஞ்சு சாம்சன்
பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், பதும் நிஷங்கா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், குசால் பெரேரா
ஆல்ரவுண்டர்கள் - அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், மதீஷா பதிரானா

Advertisement

SL vs IND 3rd T20 Dream11 Prediction, Today Match  SL vs IND, SL vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs India

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News