இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலேவிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக நிஷான் மதுசங்கா - கேப்டன் திமுத் கருணரத்னே இணை களமிறங்கினர். இதில் 29 ரன்களை எடுத்திருந்த மதுசங்கா, கர்டிஸ் காம்பேர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கருணரத்னேவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

Advertisement

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருணரத்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15ஆவது சதத்தையும், குசால் மெண்டிஸ் தனது 8ஆவது சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 18 பவுண்டரி, ஒரு சிக்சர் என 140 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 15 பவுண்டரிகளை விளாசி 179 ரன்களை எடுத்திருந்த நிலையில் மார்க் அதிர் பந்துவீச்சில் லோர்கன் டக்கரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - பிரபாத் ஜெயசூர்யா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சண்டிமல் 18 ரன்களுடனும், ஜெயசூர்யா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர், கர்டிஸ் காம்பெர், பெஞ்சமின் வைட், ஜார்ஜ் டக்ரெல் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News