நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் 2 ரன்களில் நடையைக் கட்டினார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கிளென் பிலீப்ஸ் 4 ரன்களுக்கும், மைக்கேல் பிரேஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் ஹெய் 3 ரன்களுக்கும் என நடையைக் கட்ட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரர் வில் யங்கும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதனால் நியூசிலாந்து அணி 56 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மிட்செல் சான்ட்னர் - ஜோஷ் கிளார்க்சன் இணை நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.

இதில் சான்ட்னர் 19 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 24 ரன்களில் ஜோஷ் கிளார்க்சனும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்த் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் மெண்டிஸ் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேராவும் 3 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா ஆகியோர் லோக்கி ஃபர்குசனின் அடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் லோக்கி ஃபெர்குசன் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பதும் நிஷங்கா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் மறுபக்கம் பனுகா ராஜபக்ஷா 15 ரன்களுக்கும், வநிந்து ஹசரங்கா 3 ரன்களுக்கும், துன்னித் வெல்லாலகே ஒரு ரனிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் இலங்கை அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 52 ரன்களைச் சேர்த்திருந்த பதும் நிஷங்கா தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழக்க, இலங்கை அணியோ 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News