Sri Lanka vs New Zealand 2nd Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

இதையடுத்து அணிகளுக்கும் இடையேயான இரானடாவது டெஸ்ட் போட்டியானது நாளை (செப்.26) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணியானது கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடி போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியின் வெற்றி தோல்வி வைத்தே தொடரின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Advertisement

SL vs NZ 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
  • இடம் - கலே கிரிக்கெட் மைதானம், கலே
  • நேரம் - செப்டம்பர் 26, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

SL vs NZ 2nd Test Pitch Report

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 45 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 24 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 365 ரன்கள். பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs NZ 2nd Test: Where to Watch?

Advertisement

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனி பார்க்க விரும்புவோர் சோனி லிட் ஓடிடி தளத்திலும், ஃபேன் கோடி செயலியிலும் இப்போட்டியை நேரலையில் காண முடியும். 

SL vs NZ Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 39
  • நியூசிலாந்து - 18
  • இலங்கை - 10
  • முடிவில்லை - 11

Sri Lanka vs New Zealand 2nd Test Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசிதா ஃபெர்னாண்டோ.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லாதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதீ (கே), அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க். 

SL vs NZ 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் சண்டிமால், டெவான் கன்வே
  • பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன், பதும் நிஷங்கா (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - தனஞ்சய் டி சில்வா, கிளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திர, கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ்
  • பந்துவீச்சாளர்கள் – அஜாஸ் பட்டேல், பிரபாத் ஜெயசூரிய
Advertisement

SL vs NZ 2nd Test Dream11 Prediction, Today Match SL vs NZ, SL vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NZ Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News